திருக்கயிலாய பரம்பரை துாத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதீனம்


பாரம்பரிய முறைப்படி தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தனுர் மாத பூஜைகளும் நடைபெற்று வரும்  திரு கயிலாய பரம்பரை  பெருங்குளம்   செங்கோல் ஆதீனம் மடம் .

இம் மடத்தில் தனுர் மாத பூஜையின்போது உலகெங்குமுள்ள மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து விரைவில் குணமடையவும் தொற்றுநோய் காரணமாக ஆலயங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிபடும் நிலைமாறி வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் கும்பாபிஷேகங்கள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது

. இம்மடம்   தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஒரு காலத்தில் திருக்குளந்தை என அழைக்கப்பட்ட பெருங்குளத்தில்   மிகப்பழமையான இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த. திருக்கயிலாய. பரம்பரை   செங்கோல் ஆதீனம் மடம் உள்ளது

 இந்த திருமடத்தின் குரு   முதல்வராக. இருந்த. ஸ்ரீலஸ்ரீ  சத்திய ஞான தரிசினி  சுவாமிகளை   தொடர்ந்து 102வது குருமகா சன்னிதானமாக. இருந்த. ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகளின் தெய்வீக பணியை தொடர்ந்து தற்போது  குருமகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் மடத்தில் சீரிய பணிகளை இறைவன் அனுக்கிரகத்தால் மட வழிபாடுகளை  ஏற்கனவே   வழிநடத்திச் சென்ற மடாதிபதிகளின் நெறிமுறைகள் மடாதிபதிகளின் வழிகாட்டுதலோடு சிறப்பு பூஜைகளை  செய்து வருகிறார்  


 குரு முதல்வருக்கு சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி நாளிலும் 102 ஆவது குருமகாசந்நிதானம் சுவாமிகளுக்கு தைமாதம் தசமி திதியில் குரு பூஜை நடைபெற்று வருகிறது


 காலையிலும் மாலையிலும் மடத்தில் வழிபாடுகள் நடைபெறுகிறது பக்தர்களும் வழிபட்டுச் செல்கிறார்கள் மடம்  அமைந்துள்ள பெருங்குளத்தில் மடாதிபதிகளின் 3 ஜீவ சமாதிகள் உள்ளன

 மேலும் இந்த மடத்திற்கு திருநெல்வேலி ஓமநல்லூர் பாபநாசம் பாப்பான்குளம் திருக்குற்றாலம் ஆகிய ஊர்களிலும் ஆன்மிக தர்ம பணி செய்வதற்கு கிளை மடங்கள் உள்ளன

முற்காலத்தில் 18வது பட்டம் குருமகா சன்னிதானம் திகம்பர சித்தர் காலத்தில் சோழ மன்னரிடம் போரிட்டு வென்ற பாண்டிய மன்னர் பெருஙகுளத்தில்   திகம்பர சித்தருக்கு மடம் அமைத்து அவரை வழிபாடு செய்து அவர் வழங்கிய செங்கோலை பெற்று மகிழ்ந்தான் தொடர்ந்து கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு அக்காலத்தில் செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்ற ஆதீனமாக பெருங்குளம் ஆதீனம் ஒரு காலத்தில் இருந்து வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என்ற ஒரு சிறப்புப் பெயர் அக்காலம் முதலே இருந்து வருகிறது

 தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ மடங்களில் ஒன்றான செங்கோல் ஆதீன மடத்திற்கு நாமும் சென்று மடத்தில் முக்தி அடைந்த சுவாமிகளை வழிபாடு செய்து தற்போது மடத்தை நிர்வாகம் செய்து வரும் குருமகா  சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகளின் அருள் பெற்று வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் அடைவோம்

 இந்த மடத்தில் வந்து அமர்ந்து குருமகா சன்னிதானம் முன்பாக முக்தியடைந்த சுவாமிகளையும் குருமகா சன்னிதானம் மனதளவில் வேண்டி தியானம் செய்ய அவர்களின் மனபாரம் குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கிறது நாமும் வழிபடுவோம்



செய்தி படிக்கும் அன்பர்கள் தாங்கள் செல் நம்பருடன் கருத்து பதிவிடலாமே.....













கருத்துகள்

கருத்துரையிடுக