திருவெண்ணை நல்லூரில் குருமகா சன்னிதானம் தரிசனம்
திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் திருவெண்ணெய்நல்லூரில் தனுர் மாத தரிசனம் செய்தார்
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவெண்ணைநல்லூர் மெய்கண்டர் திருக்கோவில் உள்ளது
இக்கோவிலில் ஆண்டுதோறும் தனுர் மாத சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் அதன்படி நடந்த வழிபாட்டில் முன்னதாக மெய்கண்டார் சுவாமிக்கு அனைத்துவித சிறப்பு அபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது
இந்த தீபாராதனையில் திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக