ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் 24 ஆவது குருமகாசந்நிதானம் வழிபாடு செய்து ஆவுடையார்கோவில் நகரில் நடைபெறும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து செய்ய கேட்டுக் கொண்டார்
ஆவுடையார் கோவில் நகரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது
இக்கோவில் 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தபின் பதினோராவது குருமகா சன்னிதானம் பின் வேலப்ப தேசிகர் மூர்த்திகள் குருமூர்த்தி திருப்பணி வேலைகளையும்
பள்ளிக்கூட விநாயகர் திருப்பணி வேலைகளை யும் அடியவர் குளக்கரை விநாயகர் திருக்கோவில் திருப்பணிகளையும் சீராட்டு விநாயகர் கோவில் திருப்பணிகளையும் கட்டளை மட திருப்பணி வேலைகளை யும் வட நகர் கைலசநாதர் கோவில் திருப்பணி வேலைகளை யும் பார்வையிட்டு ஆய்வு செய்து எந்த அளவுக்கு பணிகள் நடக்க வேண்டும் என்றும் இனி எவ்வளவு பணிகள் நடைபெற வேண்டுமென்றும் விசாரித்து திருப்பணி பொறுப்பில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை திருப்பணி வேலைகளை விரைந்து செய்து கும்பாபிஷேகம் செய்வதற்கு உரிய பணிகளை விரைந்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்
கருத்துகள்
கருத்துரையிடுக