ஆவுடையார்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாதிரை வழிபாடு நடந்தது.
ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக சிறப்பு மிக்க திருவாசகம் பிறந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் கரோனா தாக்கம் காரணமாக மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறாத நிலையில் எளிமையான முறையில் திருவாதிரை வழிபாடு நடந்தது.
திருவாடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி ஆத்மநாதர்,யோகாம்பிகா,குருந்தமூலம்,மாணிக்கவாசகர்,வீரபத்திரர்,நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது.அபிஷேக அர்ச்சனைகளை நம்பியார்கள் சிவாச்சாரியார்கள் செய்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக