ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் கடை சோம வார விழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் கடை சோம வார விழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
இக் கோயிலில் கார்த்திகை மாத சோம வார விழாவை முன்னிட்டு 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி குதிரை சாமி வீரபத்திரர் ஆத்மநாதர் யோகாம்பிகை உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து அதனைத் மாணிக்கவாசகர் குருந்த மூலம் ஆகியவற்றிற்கு தீபாராதனை நடந்தது
வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர் அபிஷேக அர்ச்சனைகள் ஆத்மநாதருக்கு பாலசுப்பிரமணிய நம்பியாரும் மாணிக்கவாசகருக்கு தியாக ராஜ மாணிக்க குருக்களும் செய்தனர்
ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மணியம் ராமன் ஆகியோர் செய்தனர் ஆவுடையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக