சேலம் அருகே 108 பம்பை முழங்க நடராஜர் ஆருத்ரா அபிஷேக ஆராதனை விழாவும் பம்பை இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
சேலம் அருகே 108 பம்பை முழங்க நடராஜர் ஆருத்ரா அபிஷேக ஆராதனை விழாவும் பம்பை இசை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
சேலம் கிழக்கு மாவட்ட தமிழ்தாய் கிராமிய வெண்கல பம்பை இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் அகத்தியர் வேத சிவாகம சாஸ்திர சம்பிரதாய ஜோதிஷ வைத்ய சங்கீத நாட்டிய ஆன்மிக கலாசார அகாடமி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.
நெத்திமேடு ஊஞ்சல்காட்டு முனியப்பன் கோயில் நடந்த விழாவிற்கு சிவஸ்ரீ திருஞான சம்பந்த ஈசான சிவாச்சாரியார் சுவாமிகள் தலைமை வகித்து விருது வழங்கினார்.
தேவசேனாதிபதி சிவாச்சாரியார்,பால ஸ்ரீதர் வெங்கடேச சிவாச்சாரியார் சிவராஜ சிவாச்சாரியார் சுகவனசிவ சிவாச்சாரியார் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் மாநில நலச்சங்க மாநில தலைவர் கானை சத்தியராஜ்,அகில இந்திய திருக்கோயில் அமைப்பு நிறுவனர் பகளாமுகிதாசன் முனிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
108 பம்பை இசைக்கலைஞர்கள் பம்பை இசை வாசிக்க நடராஜர் புறப்பாடு நடந்து அப்போது நடராஜர் முன்பாக உடுமலை செந்தில் ஆனந்த தாண்டவம் ஆடினார்.அதற்குபின் விருது வழங்கும் விழாவில் உடுமலை செந்திலுக்கு சிவதாண்டவ சக்கரவர்த்தி என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது
தொடர்ந்து சின்ராஜ்,வெங்கடாசலம்,ஜெயபால்,பெருமாள்,மாதேஷ் ஆகியோருக்கு எங்கள் ஆசான் விருதும் தொடர்ந்து சிறந்த 108 பம்பை இசை கலைஞர்களுக்கும் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தமிழ்தாய் கிராமிய வெண்கல பம்பை இசைக்கலைஞர்கள் நலச்சங்க தலைவர் சக்திவேல் செயலாளர் ஞானவேல்,பொருளாளர் பிரகாஷ் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல் தந்தவர் பொருளாளர் பிரகாஷ் 888333 2238
கருத்துகள்
கருத்துரையிடுக