ஸ்ரீ உச்சிஷ்ட ஞான கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி பெருவிழா
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டருளுகின்ற அருள்மிகு உச்சிஷ்ட ஞான கணபதிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆணைப்படி சங்கடகர சதுர்த்தி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சதுர்த்தி பெருவிழாவில் ஸ்ரீ உச்சிஷ்ட ஞான கணபதிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று , சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் ஸ்ரீ உச்சிஷ்ட ஞான கணபதி அருள்பாலித்தார். இந்நிகழ்வில் அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக