திருவாவடுதுறையில் குருமுதல்வருக்கு குருபூஜை விழா நடந்தது


திருவாவடுதுறையில்   குருமுதல்வருக்கு குருபூஜை விழா  நடந்தது.


 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்தாபிக்க பட்ட.  பழமையான. தொன்மையான. ஆன்மிக சிறப்பு  மிகுந்த திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது





 இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத மகர தலை நாள் குருபூஜை விழா  திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது


 தொடர்ந்து தினசரி நடைபெறும் குருபூஜை விழாவில் காலை மாலை இரவு தீபாராதனைகளும் சிறப்பு நிகழ்வுகள் அன்னம் பாலிக்கும்  விழாவும் நடைபெறும்


 விழாவின் முக்கிய நிகழ்வான நமச்சிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை  24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின்  பட்டணப் பிரவேசம் குருமகாசன்னிதானத்தின்   கொலு காட்சி முக்கியமானதாகும்





 குருபூஜை விழாவை முன்னிட்டு  சுவாமிநாத சிவாச்சாரியாருக்கு சிவாகம கலாநிதி விருதும்   நாதஸ்வர வித்வான் வடரங்கம் செல்வகுமாருக்கு நாதஸ்வர கலாநிதி  விருதும்    இசை  வித்வான் சேகருக்கு தமிழ் இசைத் திலகம் விருதும் வழங்கப்பட்டது


 நிறைவாக நமச்சிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை விழா 24வது குருமா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்த நிலையில் கோமுக்தீஸ்வரர் கோவிலில் குருமகாசந்நிதானம் வழிபாடு செய்து அதனைத் தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க அலங்காரம் செய்யப்பட்ட. பல்லக்கில்   24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டணப் பிரவேச வழிபாடு நடந்தது


 பட்டன பிரவேசத்தின் போது நான்கு வீதிகளிலும் சுவாமி உலா வந்தபோது வீதிகளில் வீடுகளில் பக்தர்கள் பக்தியோடு வரவேற்று வழிபாடு செய்து சுவாமிகள் அருளிய அருள் பிரசாதத்தை பணிவோடு பெற்றுக்கொண்டனர்





 விழாவில் செங்கோல் ஆதீனம் வேளாக்குறிச்சி ஆதீனம் துலாவூர் ஆதீனம் திருப்பனந்தாள் ஆதீனம் மதுரை ஆதீனம் சூரியனார் கோவில் ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் ஆகியவற்றின் ஆதீனங்களும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர் மேலும் விழாவில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆதீன அலுவலக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்