தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருவாவடுதுறை அருகே நரசிங்கன்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சன்னிதானம் முன்னிலையில் நடந்தது
திருவாவடுதுறை அருகே பிரசித்தி பெற்ற பழமையான நரசிங்கன்பேட்டை பழனியாண்டவர் திருக்கோவில் உள்ளது இக்கோவில் முற்றிலும் திருப்பணி செய்யப்பட்டு யாகசாலை தொடங்கியது
யாகசாலையில் சகல புண்ணிய நதி தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு ஹோமம் செய்து நிறைவாக கடங்கள் மேளதாளம் முழங்க புறப்பட்டு கோயிலில் விமானத்தை அடைந்து விமானத்தில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஜீர்னோ தாரண அஷ்டபந்தன. மகா கும்பாபிஷேகம் நடந்தது
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சந்நிதானம் அவர்களின் ஆசியும் பிரசாதமும் வழங்கப்பட்டது
ஏற்பாடுகளை நரசிங்கன்பேட்டை பழனியாண்டவர் திருக்கோவில் திருப்பணி குழு கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக