திருவிடைமருதூரில் தைபூச. தீர்த்தவாரி சன்னிதானம் முன்னிலையில் நடந்தது

 திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி வெள்ளி ரத காட்சி விழா நடந்தது



 திருவிடைமருதூரில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது




 இக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது தினசரி கோவிலில் விழாவை முன்னிட்டு  ஸ்ரீ பிரகத் சுந்தர குஜாம்பிகை உடனாய. மகாலிங்க சுவாமி க்கு  சிறப்பு ஹோமங்கள் வழிபாடுகள் நடந்தது



தொடர்ந்து தைப்பூசத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதி உலா  திருக்கயிலாய திருவாவடுதுறை 24. வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது



 தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி  ரிஷப வாகனத்தில்  வீதிஉலா புறப்பட்டு காவிரிக் கரையை அடைந்து காவிரிக்கரையில் தைப்பூச படித்துறைக்கு  வந்த நிலையில்   அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை செய்து பஞ்ச மூர்த்திகள்  சன்னிதானம்  முன்னிலையில்  அஸ்திர தேவர்  சுவாமிக்கு  அனைத்து  அபிஷேகம்  செய்த. நிலையில்  தைப்பூச தீர்த்தவாரி  வழங்கினார்  தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனைகளுடன் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் காவிரியில் புனித நீராடி வழிபாடு செய்த நிலையில் அதனைத் தொடர்ந்து பக்தர்களும் வழிபாடு செய்து பஞ்சமூர்த்திகள் வழிபாடு செய்து குருமகாசன்னிதானம் அருள் ஆசி பெற்றனர்



 ஏற்பாடுகளை மகாலிங்க சுவாமி திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்தனர் திரளான.  பக்தர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு சன்னிதானத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது

கருத்துகள்