மயிலாடுதுறை அருகே கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் 27ம் ஆண்டு இலட்சதீப திருவிழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அருளாசி வழங்கல்.
மயிலாடுதுறை அருகே கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் 27ம் ஆண்டு இலட்சதீப திருவிழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அருளாசி வழங்கல்.
மயிலாடுதுறை அருகே கூறைநாடு புனுகீஸ்வரர் சுவாமிகோயில் நடந்த இலட்ச தீப விழாவில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு தென்மயிலை திருப்பாக்கள் என்ற நுாலை வெளியிட்டு அருளாசி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூறைநாடு உள்ளது.இந்த கூறைநாட்டில் பழமையான சாந்தநாயகி சமேத உடனாய புனுகீஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது.
இக்கோயிலிலில் முற்காலத்தில் தேவந்திரன் புனுகுப்பூனை வடிவில் சிவனை வழிபட்டு இழந்த பதவியை சிவனருளால் பெற்ற தலமாகும்.அதனால் புனுகு வழிபட்டதால் சிவனுக்குரிய பெயர் புனுகீஸ்வரர்.
இக்கோயிலில் நடைபெறும் லட்சதீப வழிபாட்டை முன்னிட்டு கோயிலில் உள்ள புனுகீஸ்வரசுவாமி,சாந்தநாயகி,துர்க்கை,பிரம்மா,லிங்கோத்பவர்,நடராஜர்,கிழக்கு நோக்கிய சனிஸ்வர பகவான் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.63 நாயன்மார்களில் நேசநாயனார் சன்னதி உள்ளகோயிலாகும்.இக்கோயிலில் உள்ள சாந்தநாயகியை வழிபட குழந்தை செல்வம் கிட்டும்.
இந்நிலையில் இக்கோயிலில் நடந்த லட்சதீபவழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கி தென்மயிலை திருப்பாக்கள் என்ற நுாலினை வெளியிட்டு வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவில் கோயில் தக்கார், செயல் அலுவலர் சாலிய மகாஜனசங்க நிர்வாகிகள்,ஆலய சிவனடியார்கள் திருக்கூட்டம் உழவாரப்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக