திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் ரதசப்தமி தேரோட்டம் நடந்தது

 


திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் ரதசப்தமி   தேரோட்டம் நடந்தது

 திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருமீயச்சூர் உள்ளது இந்த திருமியச்சூரில் மிகப் பழமையான பிரசித்தி பெற்ற ஆன்மிக சிறப்பு மிக்க லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி கோவில் உள்ளது


 இக்கோயில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும்

 சிவபெருமான் மேகநாத சுவாமி சுயம்புவாக அம்பாள் லலிதாம்பிகை சர்க்கர பீடத்தில் காட்சி தரும் தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் 119 சிறப்பான தலமாகும்


 இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது தொடர்ந்து தினசரி திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி குருமகாசந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக சுவாமிகள் முன்னிலையில் வீதிஉலா நடந்த நிலையில் தேரோட்ட விழா தொடங்கியது

 விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள மேகநாதசுவாமி லலிதாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்து அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க உற்சவர் லலிதாம்பிகை மேகநாத சுவாமி தேரில் வைத்து குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக சுவாமிகள் வடம் தொட தேரோட்டம் நடந்தது

 விழாவில் ஆதீன இளவரசு சுவாமிகள் மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவனர் வக்கீல் ராமசேயோன்,  திருவாருர் ஏடிஎஸ்பி பிரபு கோயில்.




பொருளாளர் முருகையன்,ஊராட்சி தலைவர் செந்தில்குமார்,திருப்புகளுர் திருச்செங்காட்டாங்குடி கோயில் பொருளாளர்கள் திருமீயச்சூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அமரகேசன்  மின்வாரியதுறை பொதுப்பணித்துறை தீயணைப்புத்துறை அலுவலர்கள் திருநெல்வேலி திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை சிவனடியார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் குருமகாசன்னிதானம் அருளாசி வழங்கினார்.

 ஏற்பாடுகளை மேகநாத சுவாமி கோவில் பணியாளர்கள் செய்தனர்.

கருத்துகள்

  1. ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்

    தொடர்ந்து இந்த தளத்தில் கோவில் தொடர்பான செய்திகள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது

    அதனால் இந்த செய்திகளின் தன்மை குறித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்

    தங்கள் ஊரில் நடைபெறும் கோயில் விழாக்கள் குறித்து தொடர்பு கொண்டாலும் இது போன்ற செய்திகள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

    தொடர்புக்கு 9487750136

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக