திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில்

 


திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் 

திருவள்ளுர் மாவட்டத்தில் திருநின்றவூரில் பழமையான இதய நோய்களை போக்கும்  மரகதாம்பிகை சமேத இருதயாலீஸ்வரர் கோயில் உள்ளது.



சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் உள்ள 

இருவருக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளசுவாமியின் விமானம் கஜபிஷ்டம் அமைப்பில் தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது.

சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேசவர் ன்னதிகள் உள்ளன.

தல விருட்சம் :இலுப்பை மரம் 

தல வரலாறு :

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர்  இவர் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும் மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோவில் கட்ட ஆசை எழுந்தது. ஆனால் அவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து மனதுக்குள்ளேயே கோயில் கட்டி முடித்தார். இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு கோவில் கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும் பூசலார் தன் மனக்கோவிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது.  இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். ஒரு நாள் மன்னன் கனவில் தோன்றிய சிவன் “ நீ கும்பாபிஷேகம் நடத்தும் நாளில் திருநின்றவூரில்  பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு நாளில் கும்பாபிஷேகம் வைத்துக் கொள் ‘ என்று கூறி மறைந்தார்.

அதன் பின் பூசலாரை சந்தித்த மன்னன் மனதிலேயே கோவில் கட்டிய விஷயமறிந்து ஆச்சர்யப்பட்டான். பெருமைக்காக கட்டும் கோவிலுக்கும் அன்பினால் மனதில் கட்டும் கோவிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோவிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இருதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியை அடைந்தார் பூசலார். பூசலாரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இங்கு நிஜக்கோவில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்து இருதயாலீஸ்வரர் என்று பெயர் சூட்டினான். இங்குள்ள அம்பாளை மரகதாம்பிகை என்கின்றனர்தல சிறப்பு :இத்தல இறைவனை வழிபட இதயம் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது வழிபட்டோர் கூறும் வேதவாக்கு.


நேரம் :

காலை 6.00 மணி முதல் 12.00 வரை மாலை 5.00 முதல் இரவு 8.00 மணி வரை


தொடர்புகொள்ள

பாலகிருஷ்ணன் 

9444164108

கருத்துகள்