சென்னை வேளச்சேரி தண்டிஸ்வரர் கோயில் ..
சென்னையில் வேளச்சேரியில் பழமையான கருணாம்பிகை சமேத தண்டிஸ்வரர் கோயில் உள்ளது.இக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட நீண்ட ஆயுள் பெற்று உயர் பதவிகள் பெற்று இன்பமுடன் வாழலாம்.இத்தைகைய சிறப்பு மிக்ககோயிலில்
சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, வேத விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி உள்ளது
கோவிலின் தல வரலாறு :
இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.
உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.
இழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.
வழிபாடு நேரம் :காலை 5.00 மணிமுதல் 11.30 வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பரிகாரம் :நீண்ட ஆயுளுடன் வாழ
உயர் பதவிகள் பெற
குமாரசாமி குருக்கள்
9884402525
கருத்துகள்
கருத்துரையிடுக