சித்தளந்தூர் சீர்காழி நாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா நடந்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சித்தளந்தூர் சிவகாமி அம்பிகா சமேத சீர்காழி நாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண மகோத்ஸ்ஸ வ பெருவிழா நடந்தது
சித்தளந்தூர் சீர்காழி நாதர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு கோயிலில் விக்னேஸ்வர பூஜை திருமுறை பாராயணம் மஹா பூர்ணாகுதி திருக்கல்யாண வைபவம் திருமாங்கல்ய தாரணம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது
அதனைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடு தீபாராதனை கல்யாண விருந்து நடந்தது இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை சித்தளந்தூர் எட்டுப்பட்டி கிராம மக்கள் செய்தனர் சிறப்பு வழிபாடு ஆலய அர்ச்சகர் ஜெகன்நாத குருக்கள் முன்னிலையில் ஓசூர் பாகலூர் சர்வசித்தி விநாயகர் ஆலய சர்வசாதகம் சிவாகம ரத்னா நெடுங்குடி மணிகண்ட சிவாச்சாரியார் திருப்புனவாசல் சுப்பையா குருக்கள் ஆகியோர் செய்தனர் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக