மயிலாடுதுறையில் காரி நாயனார் குருபூஜை விழா


காரி  நாயனார்  குருபூஜை விழா


 மயிலாடுதுறை ஆன்மீக பேரவை  மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை  மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி காரி  நாயனார்   குருபூஜை   மாசி மாத பூராட  நட்சத்திரத்தில் நடைபெற்றது.




 காரி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும்  நடைபெற்றன.



 விழாவில் மயூரநாதர் திருக்கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனர்  வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் செய்திருந்தார்.

கருத்துகள்