திருவாவடுதுறையை சேர்ந்த ராமேஸ்வரம் கிளை மடத்திற்கு நடராஜர் சிலை செய்யும் பணி தொடக்கம்

 


திருவாவடுதுறையை சேர்ந்த ராமேஸ்வரம் கிளை மடத்திற்கு குருமகா சன்னிதானத்தின் முன்னிலையில்  தாராசுரம் சிற்ப சாலையில் நடராஜர் சிலை வார்ப்பு பணி  தொடக்கம்





 திருவாவடுதுறையில் திருக்கைலாய பரம்பரை ஆதின மடம் உள்ளது இந்த ஆதீன மடம் சைவ மடங்களில் மிக பழமையான தொன்மையான பிரசித்தி பெற்ற ஆன்மிக சிறப்புமிக்க மடமாகும்


 இந்த மடத்திற்கு கிளை மடம் ராமேஸ்வரத்தில் உள்ளது இந்த மடத்தில் சிவகாமி அம்பாள் உடனாகிய நடராஜ பெருமான் ஐம்பொன் சிலை வைப்பதற்காக. சிலை செய்யும் பணி தாராசுரம் சிற்ப சிலை வார்க்கும் கூடத்தில் செய்யப்பட்டு வருகிறது அவ்வாறு சிலை செய்யப்படும் சிற்பக்கலை   கூடத்திற்கு திருக்கைலாய பரம்பரை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி ஐம்பொன் சிலை திருமேனி செய்வதற்கான விலைமதிப்புள்ள உலோகங்களை வழங்கி சிலை செய்யும் பணியை தொடங்கிவைத்தார் 


தற்போது அந்த சிலையானது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது விரைவில்  அச்சிலை   ராமேஸ்வரம் கிளை மடத்தில் திருவாவடுதுறை 24 வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நிறுவி வழிபாடு தொடங்கப்பட உள்ளது

கருத்துகள்