அன்னதானசேவையும் ஆன்மிக சேவையும் செய்து வரும் சிவ ஆன்மிக பேரவை சிவகஜபதி(54)

 அன்னதானசேவையும் ஆன்மிக சேவையும் செய்து வரும் சிவ ஆன்மிக பேரவை சிவகஜபதி(54)


 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மணலியில் உள்ள புதுநகர் பகுதியில் வசிப்பவர் சிவகஜபதி(54) இவர் இளமை பருவத்தில் போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இருசக்கர வாகனத்தின் உதவியுடன் தன் வாழ்க்கை பயணத்தை நடத்தி வருகிறார்.



இவர் ஒரு சிவ தொண்டர் தேவாரம் படிப்பது திருவாசகம் படிப்பது தன் பணியாக கொண்ட இவர் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து ஆன்மிக சுற்றுலாவும் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் மற்றொரு சேவையாக அன்னதானமும் வழங்கி வருகிறார் 



தை அமாவாசை ஆடி அமாவாசை மாகாளய அமாவாசை தினங்களில் தன் வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கிய நிலையில் தற்போது கரோனா தாக்கம் தொடங்கியது முதல் சிவதொண்டர்கள் அன்பர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி மூலமும்தன் சொந்த நிதி மூலமும் வீட்டில் உணவு தயாரித்து ஒரு கவரில் போட்டு சாலை ஒரம் திரியும் ஆதரவற்றவர்கள் மற்றும் குடிசை பகுதியில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு தன் வாகனத்திலேயே கொண்டு சென்று அன்னதான சேவை செய்து வருகிறார்.



தினசரி 50 பார்சல்கள் முதல் 100 வரை தான் வசிக்கும் பகுதியான மணலி திருவெற்றியூர் தண்டயார்பேட்டை கொருக்குபேட்டை மீஞ்சூர் மாதவரம் உள்ளிட்ட பகுதியில் அன்னதானம் செய்து வருகிறார் இவரது ஆன்மிக அன்னதான சேவையை நாம் பாராட்டுவோம்.


தொடர்புக்கு 90426 56095

கருத்துகள்