திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயிலில் அப்பர்சுவாமிகள் குருபூஜை குருமகா சன்னதிதானத்தின் முன்னிலையில் நடந்தது

 திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயிலில் அப்பர்சுவாமிகள் குருபூஜை குருமகா சன்னதிதானத்தின் முன்னிலையில் நடந்தது


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் பிரசித்தி பெற்ற பழமையான பிரகத்சுந்தரகுஜாம்பிகை உடனாய மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது.



இக்கோயில் சம்பந்தர் அப்பர் சுந்தரரால் பாடல்பெற்ற தலமாகும்.தேவாரபாடல்பெற்ற 274 தலங்களில் 93வது தலமாகவும் காவிரி தென்கரை தலங்களில் 30வது தலமாகவும் உள்ளது.


இறைவன் மகாலிங்கசுவாமி சுயம்புவாக அளவற்ற அருள்பாலித்து வருகிறார்.மூகாம்பிகை சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும் திருமண தடைபட்டவர்கள் சுகப்பிரசவம் வேண்டுவோர் பல்வேறு சிக்கல்களை சந்திப்பவர்கள் இங்குள்ள அம்பாளை வழிபட நற்பலன் கிட்டுகிறது. இக்கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் விநாயகர் சன்னதியும் சிவன் சன்னதியும் அமைந்து இக்கோயில் பஞ்சலிங்க தலமாக வணங்கப்படுகிறது


இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் அப்பர்சுவாமிகள் குருபூஜை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.இந்த வழிபாட்டில் குருமகா சன்னிதானம் அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்து பசுக்களுக்கு உணவளித்தார் சமுக இடைவெளியுடன் வழிபாடு நடந்தது.

கருத்துகள்