குமரி மாவட்ட ஆதரவற்றவர்களுக்கு கரோனா தாக்க நேரத்தில் உணவு வழங்கும் மனிதம்தேடி என்ற தன்னார்வ தொண்டு நண்பர்கள்...
மனிதநேயம் அழியவில்லை அதற்கு உதாரணம் குமரி மாவட்ட மனிதம்தேடி அமைப்பினர். கரோனா சாதாரண மனிதன் முதல் மிகப்பெரிய ஜாம்பவான்கள்வரை புரட்டி போட்டுவிட்டது நோயிலும் பொருளாதாரத்திலும் சில நேரங்களில் ஒரு வேளை உணவிற்கும் கூட
இவ்வாறு உணவில்லையே என்று கலங்கும் கண்களில் நீர் பாய்ச்சினார்கள் குமரி மாவட்டத்தினை சேர்ந்த மனிதம் தேடி என்ற அமைப்பினை சேர்ந்த அம்பிகா..லோகன்..ஜெகன்..சுபாஷ்..செந்தில்..கார்த்திக்..
அவர்களுக்குள்ளேயே நிதி பங்கீடு செய்து கரோனா ஊரடங்கில் உணவின்றி உள்ளவர்களுக்கு தினசரி காலை மாலை இரவு நேர உணவு வழங்கி வருகிறார்கள்.
நாம் என்ன நமக்கென்ன நாம் யாருக்கும் உதவிசெய்தால் யாரும் கேட்பார்களோ என்று பயந்து அஞ்சி நடுங்கும் காலத்தில் நம்மைபோல பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்கள் தானே என்று முடிவுசெய்தனர் மனிதம்தேடி அமைப்பினர்.இவர்கள் மனிதனை மட்டும் தேடவில்லை புண்ணியத்தையும் தேடிக்கொண்டார்கள்.
ஒட்டு மொத்த உணவு வழங்கும் பணிக்கு மனிதம் தேடி அமைப்பினரும் அவர்களது நண்பர்கள் அன்பர்கள் வழங்கிய நிதியையும் ஒருங்கிணைந்து பெற்று அதன் மூலம் செய்து வருகிறார்கள்
தினசரி குமரி மாவட்டம் சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி வரை ஆதரவற்றவர்கள் சாலை ஒரம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கணவர் துணையின்றி வாழும்பெண்கள் என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தொடரட்டும் இவர்கள் பணி கரோனா முடியும் வரை இவர்கள் சேவை பாராட்டப்படகூடியவை மட்டும் அல்ல பாதம் தொட்டு வணங்க கூடிய சேவையும் கூட......
Contact 9789602773
கருத்துகள்
கருத்துரையிடுக