ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வரும் ஆதிபுரிஷ்வரர் அடியார்கள் டிரஸ்ட்
சென்னையில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகில் ஆதிபுரிஷ்வரர் அடியவர்கள் டிரஸ்ட் உள்ளது இந்த டிரஸ்டின் மூலம் கடந்த 3 வருடமாக அப்பகுதி ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்
தற்போது கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்றி வீட்டில் உள்ள ஏழைகளுக்கும் சாலை ஒரத்தில் ஆதரவின்றி உள்ளவர்களுக்கும் உணவு தயாரித்து வழங்கும் பணியை இந்த டிரஸ்ட் செய்து வருகிறது.
தினசரி குறைந்த பட்சம் 100 பேர்களுக்கு உணவு தயாரித்து அதை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்கள் திருவொற்றியூர் முதல் எழும்பூர்(எக்மோர்) வரை மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் சென்று உணவு கபசுரகுடிநீர் வழங்கி வருகிறார்கள்.
இத்திருப்பணியை ஆதிபுரிஷ்வரர் அடியவர்கள் டிரஸ்ட் நிறுவனர் தலைவர் சிவபாலமணி தலைமையில் செயலாளர் ஏகாம்பரம் பொருளாளர் பத்மநாபன் துணை தலைவர் ராஜசேகர் மற்றும் ஆதிலட்சுமி ஆகியோர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சிவ தொண்டாக ஏழை பசி போக்கி வருகிறார்கள்.இவர்களை நாம் பாராட்டும் இவர்களுக்கு சிவன் முழு அருள் புரியட்டும்
conduct 9840355220
கருத்துகள்
கருத்துரையிடுக