ஆதரவற்றவர்களுக்கு பசி தீர்க்கும் குடியாத்தம் நமச்சிவாய அறக்கட்டளை.
வேலுார் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபுசிவம்(40) இவர் கோயில் அர்ச்சகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு குடியாத்தம் நகரில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு பசியில் இருப்போருக்கு உணவளிக்கவேண்டும் என்று நினைத்தார் அதன் அடிப்படையில் கடந்த 15 வருடங்களாக பகல் நேரத்தில் ஆதரவற்றவர்களுக்கு குடியாத்தம் நகரில் உணவளித்து வந்தார்
தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஒம் நமச்சிவாய அன்னதான அறக்கட்டளை என்ற அறக்கட்டளை தொடங்கி அன்னதானம் வழங்கி வருகிறார் தினசரி 50 பேர்களுக்கு என்ற அளவில் கரோனா தாக்க காலங்களில் காலை மதியம் இரவு என பசித்தோருக்கு தேடிசென்று உணவளித்து வருகிறார்கள்.பணிக்கோ வெளியூறுக்கோ ஒரு குடும்பத்தில் தந்தை சென்று வரும்போது வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது வாங்கி வருவார்களா என்று காத்திருப்பது இயல்பு வழக்கம்
அதுபோல குடியாத்தம் நகரில் இருக்கும் ஆதரவற்றவர்கள் பசி வந்து விட்டால் பாபுசிவம் எப்போது வருவார் என்று நகரில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு தந்தையாக தன் பணி செய்து வருகிறார்கள்.இவரின் சொந்த உழைப்பு நண்பர்கள் அன்பர்கள் என விரும்பி வழங்கும் நிதியை கொண்டு வீட்டில் தயாரித்து உணவளிக்கிறார் இவரது சேவையை மனதார பாராட்டுவோம்.இவரது சேவையை பாராட்டி பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது.
தொடர்புக்கு பாபுசிவம் 95002 93435
கருத்துகள்
கருத்துரையிடுக