உடையா ஊரணி வெற்றி ஈஸ்வரர் திருக்கோவில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா உடையா ஊரணி கிராமத்தில் உள்ள மிக பழமையான ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரசித்தி பெற்ற வெற்றிஈஸ்வரர் கோவில் உள்ளது
இக்கோவில் பல நூறு வருடங்களுக்கு முன்பாக வழிபாடு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தேவகோட்டை அருகிலுள்ள சம்பூரணி சிவசக்தி சித்தர் பீட அறக்கட்டளை தலைவர் ராஜா தலைமையில் அன்பர்கள் தேவகோட்டை சாத்தையா ஆடிட்டர் நாகராஜன் கவிதா துரை மாணிக்கம் செல்வக்குமார்
ஆகியோர் இணைந்து கடந்த ஒரு வருடமாக கோவில் இருக்கும் இடங்களை சுத்தம் செய்து தற்போது அப்பகுதியில் இருந்த வேலிக்கருவை மூங்கில் செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு ஹாலோ பிளாக் மூலம் செட் அமைத்து திருப்பணி நிறைவடைந்துள்ளது
கோவில் அருகிலேயே முனீஸ்வரர் சுவாமிக்கும் காளியம்மனுக்கு பீடம் அமைக்கப்பட்டு விநாயகர் சுப்பிரமணியர் நந்தீஸ்வரர் மங்களநாயகி ஆகியவற்றின் திருவுருவ சிலைகளை ராமநாதபுரத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது
தற்போது கரோனா காரணமாக அரசு கும்பாபிஷேகம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோணா பரவல் குறைந்த பிறகு கும்பாபிஷேக பணிகளை சிறப்பாக செய்வதற்கு சித்தர் பீட அறக்கட்டளை தலைவர் ராஜா உரிய ஏற்பாடுகளை செய்துவருகிறார்
மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வெற்றி ஈஸ்வரரை நாமும் வழிபட்டு வாழ்வில் வெற்றி அடைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக