தினசரி அன்னதானம் வழங்கும் "ஸ்ரீ தில்லை அகத்தியர் ஞானபீடம்"
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா சிதம்பரம் நகரில் இருந்து 2 கிமீ தூரத்தில் உள்ளது அம்மன் கோவில் பகுதி,
சிதம்பரம் சீர்காழி புறவழிச்சாலையில் அம்மன் கோவில் என்ற பகுதியில் ஸ்ரீ தில்லை அகத்தியர் ஞானபீடம் உள்ளது இந்த பீடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது.
நிறுவனர் அம்மா அகஸ்திய தேவி அவர்களின் தலைமையில் தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது கடந்த 5 ஆண்டாக ஞானபீடம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது, சிதம்பரத்தில் மேல வீதி பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு ஞான பீடத்தில் உணவு தயார் செய்யப்பட்டு தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதானம் செய்வதற்கு உரிய நிதி சிவ தொண்டர்கள் விருப்பம் போல வழங்கும் நிதியிலிருந்து செய்யப்பட்டு வருகிறது மேலும் தற்போது கரோணா பரவலுக்கு பின்னர் திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் உணவு தயார் செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது,
இந்த தன்னலமற்ற சேவையில் அம்மா அகஸ்திய தேவி அவர்கள் வழிகாட்டுதலின்படி நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, செந்தில் குமார், ஞானவேல், ஜானகிராமன், நந்தகுமார் ஆகியோர் இந்த பணியை செய்து வருகிறார்கள்.
இவர்களது தன்னலமற்ற சேவை கரோணா தாக்க காலங்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கும் சாலையில் சுற்றித் திரியும் ஆதரவற்றகளுக்கும் உணவு வழங்கி பல உயிர்களை காப்பாற்றி உள்ளனர்
அவர்களது அன்னதான சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற சிவன் அருள் புரியட்டும்.
தொடர்புக்கு 76397 46024
கருத்துகள்
கருத்துரையிடுக