புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் திருவாவடுதுறை 24 வது குருமகாசன்னிதானம் மகநட்சத்திரத்தினை முன்னிட்டு வழிபாடு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் திருவாவடுதுறை 24 வது குருமகாசன்னிதானம் மகநட்சத்திரத்தினை முன்னிட்டு வழிபாடு செய்தார்.
ஆவுடையார்கோயிலில் பழமையான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும்.
இக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் ஆத்மநாதர் மாணிக்கவாசகர் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.அவரை நம்பியார்களும் சிவாச்சாரியார்களும் பூரணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து வடநகர் சிவன்கோயில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன்கோயிலில் தரிசனம் செய்து வடநகர்கோயில்,பள்ளிகூடவிநாயகர்,சீராட்டுவிநாயகர்,அடியவர்குளக்கரை விநாயகர்,கோயில்கள் நடராஜர் பூஜை மடத்திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
பூரணகும்பமரியாதை மற்றும் அபிஷேக அர்ச்சனைகளை அம்பிகண்ணன் நம்பியார் தியாசராசமாணிக்ககுருக்கள் பப்பு சாஸ்திரிகள் செய்தனர்.ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா நடக்கும் நிலையில் தற்போது கரோனா காரணமாக ஆவுடையார்கோயில் விழா நடக்கவில்லை இந்நிலையில் குருமகா சன்னிதானம் வழக்கம்போல ஆனிமாத மக நட்சத்திர தரிசனம் செய்தார்.தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக