மயிலாடுதுறை மாவட்டம்
திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் கேதார நோன்பு சிறப்பு பூஜை நடந்தது
மயிலாடுதுறை தலைமை மடத்தில் 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னர் ஆண்டு தோறும் கேதார நோன்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்
அதன்படி 24 ஆவது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்து நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து அதனை தொடர்ந்து கேதார நோன்பு கயிறு சன்னிதானத்தின் திருக்கரங்களால் சுவாமிகளுக்கு கட்டப்பட்டது அதனைத்தொடர்ந்து தினசரி குருமுதல்வர் நடராஜப்பெருமானுக்கு
இரவு சிறப்பு பூஜை நடந்தது
இந்த வழிபாட்டில் மடத்தில் உள்ள பக்தர்கள் அரசின் உத்தரவுப்படி சமூக இடைவெளியோடு கலந்துகொண்டு குரு முதல்வர் நடராஜப்பெருமான் வழிபாடுகளைத் தொடர்ந்து 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை வழிபாடு செய்து சுவாமிகளின் திருக்கரங்களால் பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக