மயிலாடுதுறை குபேர சாயி பீடத்தில் பாபா சமாதி தின விழா
மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில் சாய் சட்டக் குழும வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு குபேர சாயிநாதர் பீடத்தில் சீரடி சாய் பாபாவின் 103ஆவது சமாதி தினம் சிறப்பாக நடைபெற்றது.
குபேர சாயிநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மல்லிகை, ரோஜா, சாமந்தி, முல்லை மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீரடி சாய் அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம சேயோன் செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக