சூரியனார் கோவிலில் குருமகாசன்னிதானம் வழிபாடு

 சூரியனார் கோயிலில் குருமகாசந்நிதானம் தரிசனம் 

செய்தார்


 தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயிலில் உள்ள சிவசூரிய பெருமான் கோவிலில் திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தார்



 தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் திருவாடுதுறை ஆதீன கட்டுப்பாட்டிலுள்ள சிவபெருமான் கோவில் உள்ளது இக்கோவிலில் சிவசூரியபெருமான் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் சாயா தேவியும் இருக்க மேற்கு நோக்கி சிவசூரிய பெருமான்  நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் திருக்கோவிலாகும் நவக்கிரகங்களில் சூரியனார்கோயில் முதல் தவமாக உள்ளது தை மாதம் பத்து நாட்கள் ரதசப்தமி விழா நடக்கும் கோயிலாகும்



 மேலும்  சூரிய பகவான் 2 மனைவியரோடு திருமண கோலத்தில் காட்சி தரும் திருக்கோவில் ஆகும் இக்கோவிலில் ஜென்ம சனி அஷ்டமத்து சனி ஏழரை சனி சூரியன் தோஷங்கள் சூரிய புத்தி சூரிய திசை உள்ளவர்கள் வழிபட நற் பலன் கிட்டுகிறது


 இத்தகைய சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற பழமையான கோவிலில் திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் வழிபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்

கருத்துகள்