திருவீழிமிழலை சிவன் கோயிலில் குருமகாசன்னிதானம் வழிபாடு

 திருவீழிமிழலையில் குருமகாசந்நிதானம் தரிசனம் செய்தார்


 திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு  சொந்தமான சுந்தரகுஜாம்பிகை உடனாய விழி நாதசுவாமி திருக்கோவில் உள்ளது



 இக்கோவிலில் சுவாமி. வீழிநாதசுவாமி கல்யாணசுந்தரர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருப்பெயர்களால் அருள்பாலித்து வருகிறார் 


சுந்தர குஜாம்பிகை அழகிய மாமுலையம்மை என்ற திருப்பெயரில் அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்


இக் கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் ஒன்றாகும்


 இக்கோவிலில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருவிழிமிழலை கோவிலில் வழிபாடு செய்து அதனைத் தொடர்ந்து பணியாளர்களுக்கு அருளாசி வழங்கி புத்தாடை வழங்கினார் இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



 இக்கோவிலில் உள்ள சிவன் சுயம் சுயம்புவாக தோன்றியவர் இக்கோவில் அப்பர் சுந்தரர் திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இது ஒரு மாடக் கோவில் போன்ற அமைப்புள்ள கோயிலாகும் திருமணத்தடை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட நற் பலன் கிட்டுகிறது

கருத்துகள்