சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே
என் வைரவன்பட்டி
சிதம்பர விநாயகர் பை ரவர் கோயில்
கும்பாபிஷேக யாகசாலை பூஜையின்போது திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மிக அருளுரை வழங்கிய போது
இந்த உடலை சிவபெருமான் படைத்திருக்கிறார் உடலும் உயிரும் இறைவனால் படைக்கப்பட்டது
ஆடு மாடு கோழி பறவைகள் யானை என ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொருவிதமான உடம்பு உள்ளது யானை பெரிதாக இருப்பதால் உயிர் பெரிதல்ல உடலும் உயிரும் இணைந்து செயல்படுகிறது
உடம்பில் உயிர் உள்ளது எத்தனையோ பிறவிகளைக் கடந்து அறிய பிறவியான மனித பிறவியே நாம் எடுத்திருக்கிறோம் பல பிறவி எடுத்து கடந்து வந்ததை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பிறவி கடன் குறித்து தெளிவாக நிறைய அற்புத விஷயங்களை தெரிவித்திருக்கிறார்
உயர்ந்த பிறவி மனிதப்பிறவி இது ஒரு அரிய பிறவியாகும் அதைவிட நாயன்மார்கள் வழிபாடு செய்த சிறப்பான கோயில்கள் 12திருமுறைகள் என அறிய பல பொக்கிஷங்கள் உள்ள தமிழ்நாட்டில் பிறப்பது மிக மிக புண்ணியம் அதிலும் 12 திருமுறை மூலம் இறைவனைப் பாடுவது மிகமிக புண்ணியம்
உயிர் என்றும் உள்ள பொருள் உயிருக்கு உடம்பையும் நாம்வாழ்வதற்கு இந்த உலகத்தையும் இறைவன் படைத்து கொடுக்கிறார்
அனைவரும் தொடர்ந்து இறைவழிபாடு செய்து உலக மக்களும் நாமும் நற்பலன்களை அடைவோம்
யாகசாலை பூஜைக்கு வந்த குரு மகா சன்னிதானத்தை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் வரவேற்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக