நாயன்மார்கள் குருபூஜை விழா
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறுபத்து மூவர் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்தர் ,
திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர்,
முருக நாயனார் ஆகியோர் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெற்றது.
திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர்,
முருக நாயனார் ஆகிய நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்றது
விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக