ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய மருத்துவ தின விழா நடந்தது
காரைக்குடி அருகே அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் சி பி எஸ் சி பள்ளியில் தேசிய மருத்துவர் தின விழா நடந்தது
விழாவிற்கு ஸ்ரீ ராஜராஜன் கல்வி நிறுவனத்தின் தலைவர் முனைவர் சுப்பையா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் கே எம் திருப்பதி கலந்து கொண்டு பேசியபோது வருங்காலத்தில் மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக வளர வேண்டும் என பேசினார் .ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி யில்,NEET தேர்வுக்கான பயிற்சி ஆறாம் வகுப்பில் இருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்விற்கு ஸ்ரீ ராஜராஜன் சி பி எஸ் சி பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வரவேற்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் கனவோடு மருத்துவர் உடையணிந்து வந்து,மருத்துவர் உடன் போட்டோ எடுத்துக் கொண்டனர் நிகழ்வின் நிறைவாக ஆங்கில ஆசிரியர் ரூசோ நன்றியுரை வழங்கினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக