கீழப்பத்தை குலசேகரநாதர் கோயிலில் வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தை கிராமத்தில் பழமையான குலசேகரநாதர் கோயில் உள்ளது
இக்கோவிலில் பள்ளத்துடையார், ஆவுடைய நாயகி, நந்தீஸ்வரர் ,வலம்புரி விநாயகர், கன்னிமூல கணபதி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சனீஸ்வரர், ஐயப்பன், சப்த கன்னியர், நாகர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன
இக்கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு குலசேகர நாதருக்கம் ஆவுடைய நாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
தை வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்
மிகவும் நன்றாக விவரிக்க பட்டுள்ளது.
பதிலளிநீக்கு