காரைக்குடி அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

 காரைக்குடி

அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு, பசுமை தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைய வளர்ச்சி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது..

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்,கணினி அறிவியல் மற்றும் பொறியியல்,மின் மற்றும் மின்னணு பொறியியல்,தகவல் பொறியியல் ஆகிய துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு ராஜ ராஜன் கல்வி குழும தலைவரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான முனைவர் சுப்பையா தலைமை வகித்து பசுமை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை பேசினார்.கல்லுாரி முதல்வர்  முனைவர் இளங்கோ தேசிய கருத்தரங்கை துவங்கி வைத்தார். மின்னணு பொறியியல்துறை டீன்  முனைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.


 அண்ணா பல்கலைக்கழக மதுரை  பேராசிரியர் முனைவர் முத்துமாரி,ராமநாதபுரம் பேராசிரியர் முனைவர் சொர்ணகீர்த்தி,கல்லுாரி டீன் சிவக்குமார்,அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சந்தோஷ்குமார்,கணினி துறை தலைவர் சுசில்குமார்,,ஆகியோர் பேசினர்..


கருத்தரங்கில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியற்கல்லுாரியில் இருந்து பெறப்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்க்கப்பட்டு  தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது 

கல்லுாரியின் துணை முதல்வர் மகாலிங்கசுரேஷ்,ஒருங்கிணைப்பாளர்
வடிவாம்பாள்,இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


முடிவில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியற்துறை தலைவர் இசபெல்லா ராணி நன்றி கூறினார்.

கருத்துகள்