காரைக்குடி ராஜ ராஜன் கல்லூரிகளில் மூன்று நாட்கள் தியானப்பயிற்சி வகுப்புகள் நடந்தது

 



காரைக்குடி 

காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள, ராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ராஜ ராஜன் மகளிர்  கல்வியியல் கல்லூரிகளில் மூன்று நாட்கள் தியானப்பயிற்சி வகுப்புகள் நடந்தது



 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள்   துணைவேந்தர் சுப்பையா ஆலோசனையின்படி ராஜ   ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சிவகுமார்  தலைமையில் நடைபெற்றது. 


தியானப்பயிற்சிகளை  தேவகோட்டை இதய நிறைவு தியான பயிற்சி குழுவினர்கள் ரவிச்சந்திரன் மற்றும்  மரிய செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள். 

இப்பயிற்சி முகாமில் யோகா மற்றும் தியான பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறினர்.. பேராசிரியர் லெட்சுமி  மூன்று நாள் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்தார். பாலசுந்தரி  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்

கருத்துகள்