காரைக்குடி அமராவதி புதூர் ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

 காரைக்குடி 

ராஜ ராஜன் ப பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்  நடந்ததுகாரைக்குடி அமராவதி புதூர் ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 

இதில் சென்னையை சேர்ந்த பெசந்த் டெக்னாலஜி நிறுவனம் பங்கு பெற்றது.  இராஜ இராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் .சுப்பையா  தலைமை வகித்தார்.


 161 மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற்றனர். இதில் 21 மாணவர்கள் இறுதி சுற்றில் தேர்வாகியுள்ளனர்.கல்லூரியின் தலைவர் சுப்பையா மற்றும் டீன்  சிவக்குமார் இருவரும் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பணி நியமன ஆணையை வழங்கினர். இந்த முகாமில் பெசந்த் நிறுவனத்தின் பொது மேலாளர் முகமது இஸ்மைல்,   விஜயராமன் மற்றும்  தினேஷ் முதலானோர் கலந்து கொண்டு  தேர்வு செய்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமை இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் பாலாஜி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள்